அடைமழையுடன் கூடிய காற்றினால் சேதமாகிய மின் கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகளை திருத்தியமைக்கும் பணியில் மின்சாரசபை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.27.02.2018 இரவு அட்டன் தலவாக்கலை உள்ளிட்ட பல பகுதிகள் குடியிருப்புகளின் கூரைகள் சேதமானதுடன் மின்சார தூண்களும் சேதமாகியது.
இதனையடுத்து காசல்ரீ அட்டன் பிரதேசங்களில் மின் பாவனை தடைப்பட்டிருந்த நிலையில் 28.02.2018 காலை முதல் பாதிப்படைந்த மின்சார தூண்களையும் சீரமைத்துவருகின்றனர்.
மேலும் கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்துவருகின்ற நிலையில் காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தே காணப்படுவதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்