ஹட்டனில் சில வர்த்தக நிலையங்களை உடைத்து திருட முயற்சி- சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு!!

0
111

அட்டன் நகரில் சில வர்த்தக நிலையங்களை உடைத்து திருட முயற்சித்த சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அட்டன் நகரில் 17.05.2018. வியாழகிழமை விடியற்காலை 03,மணி அளவில் சில வர்த்தகநிலையங்கள் இனந்தெரியாதவர்களால்  உடைத்து திருட முயற்சித்துள்ள சந்கே நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அட்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் .

இனந்தெரியாத திருடர்கள் சிலவர்த்தக நிலையங்களில் உள்ள கதவுகளில் உள்ள பூட்டுகளை மாத்திரம் உடைத்துள்ளதாகவும் உடைத்து வர்த்தக நிலையங்களுக்குள் செல்வதற்கு முயற்சித்துள்ளதாகவும் இதனை அட்டன் நகர பாதுகாப்பு உத்தியோகத்தர் இனங்கண்டு சத்தமிட்டதை கண்டு திருடர்கள் தப்பித்து ஒடியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே சந்தேக நபர்களை கைது செய்யும் நோக்கில் அட்டன் பொலிஸார் கோரா என்ற மோப்ப நாய் மற்றும் சீ,சீ.டி.வி,கேமராவையும் பரிசோதனை செய்து குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

20180517_073016 20180517_072854

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதிஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here