ஹட்டனில் 15ஏக்கர் நிலபரப்பு தீயினால் எரிந்து நாசம்!!

0
189

ஹட்டன் பழைய கொழும்பு பிரதான வீதியின் அருகாமையில் உள்ள காட்டு பகுதியில் தீ.

ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பழையகொழும்பு பிரதானவீதிக்கு அருகாமையில் உள்ள காட்டுபகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 15ஏக்கர் நிலபரப்பு எரிந்து சாம்பளாகியுள்ளதாக   தெரிவிக்கபடுகிறது.

இந்த சம்பவம் 25.01.2018வியாழகிழமை மாலை 04.30 மணி அளவில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

07 (1) 01

இது போன்ற வனபகுதிகளுக்கு தீ மூட்டுவதனால் வனபகுதியில் உள்ள மிருகங்கள் தேயிலை செடிகளுக்கு உட்புகுந்த பணிசெய்யும் தொழிலாளர்களை தாக்கிவிட்டு செல்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடா்பில் வனபகுதிக்கு தீ மூட்டியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபா் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here