ஹட்டன் நோர்வூட் பொகவந்தலாவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சமையல் எரிவாறு இன்று 24 திகதி விநியோகம் செய்யப்பட்டன.சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் இன்று அதிகாலை 3.00 முதல் வரிசையில் நின்றிருந்த போதிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு சமையல் எரிவாயு பெற்றுக்கொண்டனர் இதில் நூற்றுக்கணக்கானோர் பல நாட்கள் வரிசையில் நின்ற போதிலும் சமையல் எரிவாயு பெற்றுக்கொள்ள முடியாத ஒரு துர்பாக்கிய நிலையே உள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை ஹட்டன் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள்களின் தட்டுப்பாடு காரணமாக அவற்றினை பதுக்கி கருப்புச் சந்தை வியாபாரத்தில் ஈடுப்பட்டு வருவதாக மற்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களையும் பல சமையல் எரிவாயு வர்த்தக நிலையங்களில் உள்ள வரிசையில் நிறுத்தி ஒரு பத்து அல்லது பதினைந்து சமையல் வரிவாயுகளை பெற்று கூடிய விலைக்கு விற்பனை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 8500 ரூபா வரை விற்பனை செய்து வருவதாகவும் இதனால் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் தங்களுக்கு மாதம் தேவையான எரிவாயுவினை பெற்றுக்கொள்ள பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து அரசாங்கம் கவனமெடுத்து ஒரு குடும்பத்திற்கு ஒரு எரிவாயு பெற்றுக்கொள்ளும் வகையில் கிராம சேவகர் ஊடாகவோ அல்லது அரச பொறிமுறைக்கு அமையவோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பொது மக்கள் கோருகின்றனர்.
இதே போன்று பெட்ரோல் மண்ணெண்ணை மற்றும் டீசல் என்பன வற்றினையும் இவ்வாறு வரிசையில் நின்று வாகனங்களுக்கு நிரப்பி மீண்டும் அதனை எடுத்து சேகரித்து கூடிய விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில் இன்று இந்த அத்தியவசிய எரிபொருட்களின் தட்டுப்பாடு காரணமாகவே அதனை பயன் படுத்தி அதிகமானவர்கள் கொள்ளை விற்பனையில் ஈடுபடுகின்றனர் அது மாத்திரமின்றி குறைந்த அளவு கொடுக்கப்படுவதனால் இல்லாமல் போகலாம் என்ற அச்சத்தில் பொது மக்களும் இரண்டு மூன்று தடைவைகள் வரிசையில் நின்று அவற்றினை சேகரித்து வருகின்றன இது கிடைத்தவர்களுக்கே திரும்ப திரும்ப கிடைக்கின்ற போதிலும் பல குடும்பங்கள் மண்ணெண்ணை,பெட்ரோல்,டீசல்,எரிவாயு உள்ளிட்ட பொருட்களை பெற முடியாத நிலையே காணப்படுகின்றன.இவ்வாறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இவ்வாறு தேவை அதிகமாக சேகரிப்பவர்களுக்கு எதிராகவும்,அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்டங்களை அமுல் படுத்தப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதே நேரம் கடந்த காலங்களில் ஏற்பட்ட சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகவும் விலையுயர்வு காரணமாகவும் அதிகமான குடும்பங்கள் மண்ணெண்ணை அடுப்புக்கு மாற்றம் பெற்றனர் இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மலையகத்தில் உள்ள எண்ணை நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் இடம் பெறாததனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை லிட்ரோ நிறுவனம் எவரும் வரிசையில் நிற்க வேண்டாம் இன்று விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவித்திருந்த நிலையில் எரிவாய விநியோகம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்