கொழும்பு பதுளை பிரதான புகையிரத வீதியின் ஹட்டன் பகுதியில் குவிந்து காணப்படும் குப்பைகள் கண்டுகொள்ளபடாத அதிகாரிகள்கொழும்பு பதுளை பிரதான புகையிரத வீதியின் ஹட்டனில் இருந்து சிங்கமலை சுரங்கபாதை வரை அதிகளவிலான குப்பைகளும் மதுபான போத்தல்கள் மற்றும் பியர் டின்கள் என்பன புகையிரத வீதியின் அருகாமையில் குப்பைகள் இனந்தெரியதாவர்களால் கொட்டபடுவதாக பிரதேசமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிசெல்லும் புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகள் மதுபானங்களை அருந்திவிட்டு போத்தல்களை வீசிவிட்டு செல்வதாகவும் சிங்கமலை சுரங்கத்தின் அருகாமையில் இருக்கின்ற குடியிருப்பாளர்களும் ஹட்டன் புகையிரத நிலையத்தினை தாண்டி வாழ்கின்ற மக்களும் நாளாந்தம் சேகரிக்கபடுகின்ற குப்பைகளை இரவு நேரங்களில் பிரதான புகையிரத வீதியில் வீசி செல்லவதாகவும் தெரிவிக்கபடுகிறது.
இதனால் மழைகாலங்களில் பிரதேச மக்களால் வீசபடுகின்ற குப்பைகள் துர்நாற்றம் வீசபடுவதால் டெங்குபோன்ற நோய்கள் ஏற்பட கூடிய சாத்திய கூறு காணபடுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.
சிங்கமலை சுரங்கத்திற்கு அருகாமையில் வாழ்ந்து வருகின்ற மக்களின் பிள்ளைகளை நாளாந்தம் பாடசாலைக்கு அழைத்து செல்லவேண்டுமானால் குறித்த புகையிரத வீதியின் ஊடாகவே செல்லவேண்டியுள்ளதாகவும் இது போன்ற குப்பைகள் காணபடுவதால் துர்நாற்றம் வீசபடுகின்றமையால் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மற்றும் பொஸ்கோ கல்லூரிகளுக்கு வருகின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கினறனர்.
எனவே புகையிரத வீதியில் நாளாந்தம் சேரிக்கபடுகின்ற குப்பைகளை புகையிரத வீதியிலும் புகையிரத வீதியின் அருகாமையிலும் கொட்டபடுவதை தடுப்பதற்கு சம்பந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென பிரதேசமக்கள் கோறிக்கைவிடுக்கின்றனர்.
(பொகவந்தலாவ நிருபர்எஸ்.சதீஸ்)