உழவர் திருநாளான தைத்திருநாளினை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் நாடெங்கிலும் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிலையில் ஹட்டன மார்கெட் ஐக்கிய வர்த்தக சங்கம் இன்று காலை 15 ம் திகதி மார்கெட் வளாகத்தில் தைப்பொங்கல் விழா ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது. குறித்த தைப்பொங்கல் விழாவில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக பால் பொங்கி வர்த்தக நிலையங்கள் சிறக்க ஓமகுண்டம் யாக பூஜை; ஆகியன இடம்பெற்று விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன..
குறித்த நிகழ்வில் நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த இசைக்களைஞர்களின் படல்களும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுக்கு முன்னாள் ஹட்டன் நகரசபையை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள்,மற்றும் மாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் உட்பட புகையிரத திணைக்கள ஊழியர்கள் ஹட்டன் நகர சபை ஊழியர்கள் பொது மக்கள் வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்