மலைநாட்டில் புகழ் பூத்த ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் மற்றுமொரு சாதனையாக ஹைலண்ட்ஸ் பிரிமியர் லீக் ( HPL 2024 ) கிறிக்கட் சுற்றுப் போட்டி மற்றும் வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றன.
பாடசாலை மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பாடவிதான செயற்பாடுகளுக்கு அப்பால் புறக்கிருத்திய செயற்பாடுகளில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தரம் 6,7,8,9,10,11,மற்றும் உயர்தர வகுப்புகள் என தனித்தனியாக போட்டிகள் இடம்பெற்றன.
இப்போட்டிகள் கடந்த மூன்று தினங்கள் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் முதல்வர் எஸ்.ராஜன் அவர்களினது வழிகாட்டலினூடாகவும், பிரதி அதிபர்களினதும், விளையாட்டு குழுவினதும், வகுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரினதும் பெருமுயற்சியூடாகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.
அனைத்து போட்டிகளிலும் வகுப்பு ரீதியாக 1ம், 2ம், 3ம் இடம் பெற்றமைக்கான கேடயமும் போட்டிகளில் தனிப்பட்ட சாதனைகளை பதிவு செய்த 42 மாணவர்கள் வெற்றி கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.