ஹட்டன நெஷனல் வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது!!

0
119

தமிழர் நினைவு நாள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூர்ந்தார்கள் என வங்கி ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டுருந்தனர்.

அந்நிலையில் தற்போது குறித்த வங்கிக்கு எதிராக கடும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு செய்து வருகின்றனர்.

அதேவேளை குறித்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சிலர் தமது கணக்கினை மூடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உதவி முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கம் – HNB வங்கியின் விளக்கம்

வங்கியின் சமூக ஊடக கொள்கையை மீறியமை தொடர்பிலேயே இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஹற்றன் நஷனல் வங்கி வட்டாரத்தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பில் ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் குறித்த வங்கி வட்டார தகவல்கள் மூலம் மேலும் அறியமுடிந்ததாவது ,முழுமையான தகவல்களின் பின் புலத்தினை நோக்கினால் இதில் உள்ள சிக்கல் புரியும்.

No automatic alt text available.

No automatic alt text available.

Image may contain: one or more people

No automatic alt text available.No automatic alt text available.

Image may contain: one or more people

No automatic alt text available.

தெற்கில் வெற்றி விழா தொடர்பான நடவடிக்கைகளில் வங்கி பங்கு கொள்வதை எமது எதிர்ப்பால் நிறுத்தினோம்.

அவ்வேளையில் இது தொடர்பான சுற்றறிக்கை, சமூக ஊடகக் கொள்கை என்பவற்றை வங்கி அறிமுகப் படுத்தியது.அதனடிப்படையில், வங்கிச் சீருடையுடன் வங்கி தொடர்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் உண்டு.

இதனைக் காரணம் காட்டியே நடவடிக்கை எடுக்க முகாமைத்துவம் வற்புறுத்தப்பட்டது.இது சம்பளத்துடன் கூடிய இடை நிறுத்தம்.

வங்கிகளில் உள்ளக விசாரணைகள் இந்த வழி முறையுடன் தான் ஆரம்பிக்க வேண்டும்.சமூக ஊடகக் கொள்கைகளை மீறியது தான் குற்றச் சாட்டு. எனவே தண்டனை மிகச் சிறியதாக தான் இருக்கும் என அறிய முடிகிறது என கருதப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here