உலகக்கிண்ண கால்பந்து வரலாற்றில் தனது முதலாவது ஹாட்ரிக் (Hat-trick) கோல்களைப் பதிவு செய்த லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), மிரோஸ்லாவ் குளோசேயின் (Miroslav Klose) உலகக்கிண்ண அதிகூடிய கோல் சாதனையை (16 கோல்கள்) சமன் செய்து அர்ஜென்டினா (Argentina) ரசிகர்களுக்கு மறக்க முடியாத வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார்.
கன்சாஸ் நகரின் ஆரோஹெட் மைதானத்தில் (Arrowhead Stadium – Kansas City) நடைபெற்ற அல்ஜீரியாவுக்கு (Algeria) எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
மெஸ்ஸி தனது சர்வதேச கால்பந்து வாழ்வின் 200 ஆவது போட்டியில் விளையாடி, உலகக்கிண்ணத் தொடர்களில் தனது 11 ஆவது ஹாட்ரிக்கை (ஒட்டுமொத்தமாக 61 ஆவது) பதிவு செய்தார்.
மேலும், 5 உலகக்கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதே நாளில் நடந்த மற்றுமொரு போட்டியில் பிரான்ஸ் (France) வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé) செனகல் (Senegal) அணிக்கு எதிராக 2 கோல்களை அடித்து 14 உலகக்கிண்ண கோல்களுடன் பட்டியலில் 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
நார்வே (Norway) வீரர் ஏர்லிங் ஹாலாண்ட் (Erling Haaland) ஈராக்கிற்கு (Iraq) எதிரான போட்டியில் 2 கோல்களை அடித்தார்.




