ஹாலிஎலயில் முச்சக்கரவண்டி மரத்தில் மோதி விபத்து; தாயும் இரு பிள்ளைகளும் படுகாயம்!

0
160

பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, ஹாலிஎல போகாமடித்த பாலத்துக்கு அருகிலுள்ள பாரிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர், பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. , ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் பெண்ணொருவரும் அவரது குழந்தைகளும் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here