நமுனுகல பெருந்தோட்ட கம்பனியின் ஹுலந்தாவ தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட 25 வீடுகளும் வீடுகளுக்கான காணி உரித்துகளும் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, சாகல ரத்நாயக்க, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, மற்றும் தென் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.