ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் தெரிவித்தனர்கொழும்பிலிருந்து கினிகத்தேனை பேரகாமுள்ள பகுதியிலுள்ள உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதணையிட்ட போதே 29.05.2018 காலை 250 மில்லிகிராம் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அட்டன் மாவட்ட நீதிமன்றில் 29.05.2018 ஆஜர்படுத்தவுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன். எஸ்.சதீஸ்