ஹொரண பெருந்தோட்டத்தின் தான்தோன்றித்தனத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது இ.தொ.கா

0
104

ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவினரால் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளது.

ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களுக்கு கடந்த காலங்களில் விஜயம் மேற்கொண்டிருந்த இ.தொ.காவின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் அங்கு தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் கெடுபிடிகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

பின்னர், ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்ததுடன், ஒரு கிலோ தேயிலைத்தூளை கூட வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

ஆகையால், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்து பேச்சுவாரத்தைக்கு வந்தனர். இந்த பிரச்சினைகள் அட்டன் தொழில் திணைக்களத்தில் இன்று மேலதிக தொழில் ஆணையாளர் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவுக்கும், ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி, தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், இ.தொ.காவின் பிரதிநிதிகள், ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள், தொழிலாளர்கள், அட்டன் தொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் என கலந்து கொண்டனர்.

இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினர் சாதகமான பதில்களை வழங்கினர்.

அவையாவன, 80 வீதமான தொழிலாளர்கள் நாளொன்றுக்கு எவ்வளவு வீதம் கொழுந்து பறிக்கின்றார்களோ அதுவே நோம் என அறிவிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான கவரவில தோட்டத்தின் தொழிற்சாலையில் பணிபுரிந்துக்கொண்டிருந்த வேளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 33 வயதான சிவக்குமார் எனும் தொழிலாளிக்கு நஷ்ட ஈடு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது.தொழிலாளர்கள் பறிக்கப்படும் கொழுந்தில் ஒரு நேர நிறுவைக்கு மூன்று கிலோ வெட்டப்பட்டு வந்தது. இதை தட்டிக்கேட்ட எம்.பி ஜீவன் தொண்டமான் ஒரு கிலோவாக குறைத்து கொடுத்தார்.

மேலும், தோட்ட நிர்வாகத்தினர் தொழிலாளர்கள் மீது மேற்கொண்ட இதுபோன்ற பல கெடுபிடிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா தீர்த்து வைத்தது.

அத்தோடு, இன்று தீர்மானம் எடுக்கப்பட்ட விடயங்களை எழுத்துமூலமாக அறிவிக்க ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினர் இணக்கம் தெரிவித்தனர்.இந்த நிலையில், மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையை சுமூகமாக தீர்த்து வைத்து, வெற்றியை பெற்றுக்கொடுத்த இ.தொ.காவின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு தொழிலாளர்கள் நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here