ஹொலிரூட் தோட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையை காணவில்லை!

0
144

தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட மேற்பிரிவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த ஆறு மாதமாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவி என்று அழைக்கப்படும் வீரையா ஜெயசங்கர் (வயது 49) என்பவரை, கடந்த 6 மாத காலமாக காணவில்லை என்று தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் பணிபுரிந்த அவர் கடந்த தைப்பொங்களன்று வீட்டுக்கு வந்துவிட்டு திரும்பி கொழும்பு சென்றவர் இதுவரை எந்த தொடர்புகள் இல்லை என பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் 0522258222 என்ற தலவாக்கலை பொலிஸ் நிலைய தொலை பேசி இலக்கத்துக்கும் வீரைய்யா: 0729655843 என்ற அலைபேசி இலக்கத்துக்கும் தொடர்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here