ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி மாணவர்கள் கராம் போட்டியில் சாதனை

0
46

மலையக பகுதியில் கராம் விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில் மெரினாஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த திறந்த கராம் போட்டி மெராயா தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

இப்போட்டியில் 50 விளையாட்டு கழகங்கள் பங்கு பற்றியது‌. தனி நபர் போட்டியில் எஸ் டிலான் முதலாமிடம் இரண்டாம் இடத்தை பி கபிலாஸ் பெற்றனர்.

இரட்டையர் போட்டியில் பங்குபற்றிய ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி மாணவர்களான புஷ்பராஜ் துவாரக்ஷான் சிவகுமார் பிரகதீஸ் ஆகிய இருவரும் இணைந்து மிகவும் சிறப்பாக விளையாடி அனைத்து சுற்றிலும் வெற்றிப்பெற்று. இருதி சுற்றுக்கு தெறிவாகி பார்வையாளர்களின் அமோக வரவேற்புடன் 2023 ஆண்டுக்கான செம்பியன் கின்னத்தை வெற்றிக்கொண்டனர்.

இவர்களுக்கு பணப்பரிசாக 10 ஆயிரம் ரூபாய்வும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான கின்னங்கள் மற்றும் செம்பியன் கின்னத்தையும் தனதாகிகொண்டனர்.

இந்நிகழ்வில் மெராயா பாடசாலை அதிபர் என் கிருஷ்ணராஜ் அதிபராக கலந்துகொண்டார். இப்போட்டியை மிகவும் மிகவும் சிறப்பான முறையில் V விஷ்வநாத் U கிருஷ்ணா Tகிருஷ்ணகுமார் s மினோசன் ஆகியோர் ஒழுங்கு படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here