அடுத்த முழு சூரிய கிரகணம் இலங்கையில் 3 நிமிடங்கள் நிலைக்கும்

0
59

நேற்று முன்தினம் அமெரிக்க கனடா போன்ற நாடுகளில் பல தசாப்தங்களின் பின்பு முழு சூரிய கிரகணத்தை வேற்றுக்கண்ணால் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது .இருப்பினும் குறித்த சூரிய கிரகணம் இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் ஏற்படவில்லை .

இலங்கையர்களுக்கு முழு சூரிய கிரகணம் ஒன்றை 2070 ஏப்ரல் 11ம் திகதி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது . அதாவது இன்றிலிருந்து இன்னும் 46 ஆண்டுகள் கழித்து இந்த அனுபவத்தை இலங்கையர்கள் அனுபவிக்க முடியும்.

இந்த கிரகணம் 3 நிமிடங்களுக்கு நிலைக்கும் என தெரிவிக்கப்படுகிறது .

நேற்று முன்தினம் நடந்த கிரகணம் தொடர்பாக 1970 ஆம் ஆண்டில் அமெரிக்க சண்டே ஜர்னல் செய்தித்தாள் செய்தி வெளியிட்டு இருந்தது . மீண்டும் 2024 ம் ஆண்டு கிரகணம் ஏற்படும் என அச்செய்தியில் குறிப்பிடபட்டு இருந்தது . குறித்த செய்தியானது தற்போது வைரல் ஆகி வருகிறது .

இறுதியாக 1955 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி இலங்கையர்கள் சூரிய கிரகணம் ஒன்றை பார்திருந்தார்கள் . அந்த கிரகணம் 7 நிமிடங்களுக்கு நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது .

அக்காலத்தில் , சூரிய கிரகணத்தில் ஏற்படும் பாதிப்பை குறைத்துக்கொள்ள சில தாவரங்களை உண்டு பலர் நோய் வாய்ப்பட்டதாகவும் , கிரகண நேரத்தில் பாம்புகள் உள்ளே வரலாம் என கூறி சில மூலிகைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் , மேலும் சூரிய கிரகணத்தை பார்வையிட மூக்கு கண்ணாடிகள் விற்பனை செய்யப்பதாகவும் பல கதைகள் உள்ளன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here