நானுஓயா கிரிமெட்டி கிராம சேவகர் பிரிவில் கிராம அபிவிருத்தி தொடர்பாக நடத்தப்பட்ட அபிருத்திக் கூட்டத்திற்கு கிராம
அபிவிருத்தி சங்கங்களுக்கு அழைப்பு இல்லையென நுவரெலியா பிரதேச செயலாளருக்கு இப்பிரதேசத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள் முறைப்பாடு செய்துள்ளது.
நானுஓயா கிரிமெட்டி 476 A கிராம சேவகர் பிரிவில் “வேடசமக யலி கமட” என்ற அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு 30 இலட்சம் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுய தொழில் செய்பவர்களுக்கு கோழி வளர்ப்பு , காளான் வளர்ப்பு, கிராம வீதி அபிவிருத்தி, குடிநீர் உட்பட பாடசாலை கட்டிட அபிருத்திகளுக்கு அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டங்களை கிராமத்தில் செயல்படுத்த ஒவ்வொரு
வேலைத்திட்டத்திற்கும் நீதி ஒதுக்கீடு செய்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நுவரெலியா பிரதேச செயலாளர் மூலமாக ஒவ்வொரு கிராமங்களிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராமசேவகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் பிரதேச சபை தலைவர் மதகுருமார்கள் என பலரும் கலந்துகொண்டு முப்பது இலட்சம் ரூபாய்க்கான வேலைத்திட்ட ங்களை கலந்து ஆலோசித்து கோரிக்கையை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனாலும் திகதி (27) திங்கட்கிழமை டெஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தில் நடத்தப்பட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு கிராம சேவகருக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தருக்கும் வேண்டப்பட்ட வர்களை மாத்திரம் அழைத்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அபிவிருத்தி கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதில் டெஸ்போட் A/B பிரிவு மற்றும் டெஸ்போர்ட் டிவிசன் போன்ற இடங்களில் உள்ள அபிவிருத்தி சங்கங்ளுக்கு அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை. என இப் பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்கள் கடிதம் மூலம் நுவரெலியா பிரதேச செயலாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நுவரெலியா பிரதேச செயலாளர் உடனடியாக கூட்டத்தில் இடம்பெற்ற அறிக்கையை பரிசோதித்து பதில் வழங்குவதாக கூறியிருக்கிறார். எனினும் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் கிராமசேவகர் அபிவிருத்தி உத்தியோகதர் சமுர்த்தி உத்தியோகத்தர் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட இருக்கிறது. ஆனாலும் கிரிமெட்டி கிராம சேவகர் அவருக்கு தேவைக்கு ஏற்ற சிலரை வைத்துக்கொண்டு இப்பிரதேசத்தில் உள்ள மக்களை குழப்புவதற்காக செயற்படுவது குறிப்பிடத்தக்கது இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.
டி.சந்ரு