இலங்கையில் மற்றும் பிரதேச சபை வரலாற்றில் முதன் முறையாக அப்புத்தளை பிரதேச சபையில் முதல் தமிழ் தவிசாளராக பா. கந்தசாமி கண்ணா அவர்கள் 27 திகதி நியமிக்கப்பட்டதுடன் 04வது முறையாக அவரது தலைமையில் இன்றைய தினம் (2021.09.30) முன்வைக்கப்பட்ட 2022ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டமானது 19 ஆதரவான வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது.
அதாவது அப்புத்தளை பிரதேச சபையினை பிரதிநிதித்துவப்படுத்தும் 20 உறுப்பினர்களில் 19 உறுப்பினர்களது ஏகமனதான விருப்பு வாக்குகளுடன் ( ஸ்ரீ. ல. சு. கட்சியில் 06 வாக்குகளும், ஸ்ரீ. ல. பொ. பெரமுண கட்சியில் 06 வாக்குகளும், ஐ. தே. கட்சியில் 07 வாக்குகளும் ) மொத்தமாக 19 வாக்குகளைப் பெற்று 2022ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டமிடல் ஏகமனதான சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டி.சந்ரு