அமெரிக்காவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்பில் வெளியான தகவல்!

0
68

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளன.தற்போது வரை 70000க்கு மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கலிபோர்னியாவில் அதாவது சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து சுமார் 345 கி.மீ தொலைவில் கடலில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவு கோளில் சுமார் 6.4 அளவில் பதிவான குறித்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் சில இடிந்து விழுந்துள்ளன.இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தினால் 11 பேர் வரை காயமடைந்துள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பொதுவாக ரிக்டர் அளவு 5ஐ விட அதிகமாக நிலநடுக்கம் பதிவானாலே கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

ஆனால் இந்த நிலநடுக்கத்தில் பெரிய பாதிப்புகள் பதிவாகவில்லையென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

“சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஒரு சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.நாங்கள் 11 பேர் வரை மீட்டோம். இவர்களுக்கு லேசான காயங்கள்தான் இருக்கிறது. பயப்படும் அளவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் நிலநடுக்கம் காரணமாக மின் இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதி மக்கள் தொகை குறைந்த பகுதி என்பதால் மீட்பு பணியில் எங்களுக்கு பெரிய பிரச்னை ஏதும் இல்லை.

போதுமான அளவுக்கு மீட்புபடை வீரர்களும் இருக்கின்றனர்” என்று கூறியுள்ளனர்.அதேபோல இந்த நிலநடுக்க பாதிப்புக்கள் குறித்து கலிபோர்னியா மாகாண அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரையன் பெர்குசன் கூறுகையில்,

“ஹம்போல்ட் கவுண்டியில் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் மின் பிறப்பாகி வசதியுடன் இயங்கி வருகின்றன.

இவ்வாறு நீண்ட நேரம் இயங்க முடியாது. எனவே உடனடியாக மின் இனைப்பு வழங்கப்படும்” என கூறியுள்ளார்.

அதேபோல இந்த பகுதியில் ஒரு பல்கலைக்கழகம், ஒரு துறைமுகத்தை தவிர பெரிய உள்கட்டமைப்புகள் ஏதும் இல்லாததால் மக்கள் தொகை இயல்பாகவே மற்ற இடங்களை காட்டிலும் இங்கு குறைவாகதான் இருக்கிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நிலநடுக்கம் நேற்று அதிகாலை சுமார் 2:34 மணியளவில் ஏற்பட்டதால் உடனடியாக மீட்பு பணியை ஆரம்பிப்பது பெரும் சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

அரசு அதிகாரிகள் சேதமடைந்த கட்டிடங்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.இப்பணி இன்னும் முழுமையடையவில்லை எனவும் கணக்கெடுப்பு முடிந்த பின்னர் சேதம் குறித்த முழு தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், “நிலநடுக்கம் காரணமாக மின்சார விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே 70 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

முக்கியமான இடங்களுக்கு மின்விநியோகம் அடுத்த 8-10 மணி நேரத்தில் வழங்கப்படும் என்றாலும் பெரும்பாலான இடங்களில் மின்சார விநியோகம் தாமதமடையும்.

தொடர் மழை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் இதற்கு முன்னர் அதாவது 1970ம் ஆண்டு 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

அதேபோல கடந்த 2014ம் ஆண்டு 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here