அவதூறு பரப்புபவர்களுக்கு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.சச்சுதானந்தன் எச்சரிக்கை.

0
119

மக்களோடு மக்களாக களத்தில் நின்று சேவையாற்றுவதை அனைத்து மக்களும் அறிவார்கள் அந்த படங்களை எடுத்து ஒரு சில விஷமிகள் முகநூலில் சேறுபூசவும் மக்களிடத்தில் பிழையான வதந்திகளை பரப்ப எண்ணுகின்றனர்.எனவே அவ்வாறு அவதூறு பரப்புபவல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இ.தொ.காவின் உப தலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் மக்களுக்கு தேவையான விடயங்களை தேவையான தருணத்தில் களத்தில் நின்று சேவையாற்றி வருகின்றோம்.இது தனிப்பட்டு எடுக்கப்படுகின்ற முடிவு அல்ல இ.தொ.காவின் உயர்பீடத்தோடு கலந்தாலோசித்தே முடிவை எடுக்கின்றோம்.அவை அனைத்தும் பயனுள்ள விதத்திலேயே மக்களை சென்றடையும் படி மக்களுக்கு சேவைகளை செய்கின்றோம் அதை மக்களும் உணர்கின்றார்கள்.மக்களுக்கு பதில் கூறவேண்டிய நாங்கள் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஒவ்வொரு வியங்களையும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செய்கின்றோம்.ஆனால் தை ஒரு சில முகநூல் போராளிகளும் முகநூலில் தன்னை நேரடியாக அடையாளம் காட்ட தெரியாமல் போலி கணக்குகள் மூலம் செயற்படுபவர்கள் பிழையான விதத்தில் தகவல்களை பரப்பி மக்களை திசைத்திருப்ப எத்தணிக்கின்றனர்.

அவ்வாறானவர்களை இணங்கண்டு வைத்துள்ளோம்.அவர்கள் தொடர்பாக ஆராய்ந்தும் வருகின்றோம் எனவே அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.காரணம் மக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய விடயங்களை மக்களுக்கு உரிய விதத்தில் கொண்டு செல்ல பாடுபட்டிருக்கும் இச்சமயம் ஒருசிலரின் இவ்வாறான வதந்திகளால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் உரிமைகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.எனவே இவ்வாறு வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென இ.தொ.கா உப தலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here