ஆயிரக்கணக்கான நோயாளிகள் பெரும் உயிர் ஆபத்தில்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

0
65

மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான சுமார் 15 பிரதான அத்தியாவசிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் புற்று நோயாளர்களுக்கான 15 பிரதான அத்தியாவசிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு காணப்படுகின்றது.

அதிநவீன மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய பல வகையான புற்றுநோய்கள் உள்ளன.இருப்பினும் மருந்து தட்டுப்பாடு காரணமாக பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக திட்டமிடப்பட்ட அட்டவணையின் படி சிகிச்சைகளை வழங்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிர்கள் பெரும் ஆபத்தில் உள்ளன.

இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி புற்று நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை அந்தந்த வைத்தியசாலைகளில் வழங்குவதற்கு தலையிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here