இதுதான் என் அழகின் ரகசியம் – ஸ்ரேயா!

0
54
dailythanthi

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரேயாவிடம் ‘எப்படி அழகு குறையாமல் வலம் வருகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த ஸ்ரேயா சரண், வளைவு நெளிவான நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் படங்கள் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, தற்போது மீண்டும் மும்முரமாக படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘சண்டக்காரி’. ‘நான் வயலென்ஸ்’ படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரேயாவிடம் ‘எப்படி அழகு குறையாமல் வலம் வருகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஸ்ரேயா பதிலளிக்கையில், “நான் என் மனதில் எதையும் ஒளித்து வைப்பது கிடையாது. என்ன தோன்றுகிறதோ… அதை அப்படியே வெளிப்படையாக பேசிவிடுவேன். ஒளிவுமறைவு இல்லாத தெளிவான மனநிலை தான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன். இயற்கையும், இறைவனும் கொடுத்த அழகை பாதுகாக்கிறேன். அவ்வளவு தான்”. என்று கூறி சிரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here