‘இந்தி தேசிய மொழி’ என கூறியது தவறு – நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு!

0
4
dailythanthi

நான் இந்தியை தேசிய மொழி என்று கூறினேன். இந்தி நமது நாட்டு மொழிகளில் ஒன்று. எப்போதும் எங்கள் மொழி(கன்னடம்) எங்களுக்கு முக்கியம். இந்தியை தேசிய மொழி என்று கூறியதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். என்று நடிகர் சிவராஜ் குமார் கூறியுள்ளார்.

நடிகர் சிவராஜ்குமார் தான் நடித்துள்ள புதிய பட நிகழ்ச்சியில் பேசும்போது, இந்தி மொழி நமது நாட்டின் தேசிய மொழி என்று கூறினார். அவர் பேசுகையில், ‘இந்தி எனது 2-வது மொழி. என்னால் இந்தி பேச முடியும். இந்தி எளிதான மொழி. நமது தேசிய மொழி. அதனால் அந்த மொழி எங்களுக்கு எப்படி தெரியாமல் இருக்கும்’ என்றார். இதற்கு கர்நாடகம் உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் தனது கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

நான் இந்தியை தேசிய மொழி என்று கூறினேன். இந்தி நமது நாட்டு மொழிகளில் ஒன்று. எப்போதும் எங்கள் மொழி(கன்னடம்) எங்களுக்கு முக்கியம். நான் குழப்பம் அடைந்துவிட்டேன். அது எனக்கு தெரியாது. இந்தியை தேசிய மொழி என்று கூறியதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். அவர்களின் மொழி இந்தி. நமது மொழி கன்னடம். அவர்களின் மொழி அவர்களுக்கு முக்கியம். நமது மொழி நமக்கு முக்கியம் என்று  கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here