இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி! கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா?

0
73

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு.நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்கிறது.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசு தொகை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது.

மேலும், 3ஆவது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், 4ஆவது இடம் பிடித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

இதோடு அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here