இறந்தும் வாழ்கிறார் நகைச்சுவை நடிகர் விவேக்! அதற்கு இதுவே சாட்சி

0
66

முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த இடத்தில் அவருக்கு மரியாதை செலுத்தி மரம் நடவேண்டும் என விவேக் கூறியிருந்தார். மறைந்த நடிகர் விவேக் நினைவாக முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரக்கன்று நடப்பட்டது.

தமிழ் திரையுலகின் நகைச்சுவை ஜாம்பவான் விவேக் கடந்த 2021ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.விவேக்கின் அனைவரும் அறிந்த இன்னொரு பக்கம் மரம் வளர்ப்பு.

எண்ணற்ற தனி மனிதர்கள், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகளோடு இணைந்து மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.தமிழ்நாட்டில் இவர் இப்படி வளர்த்த மரங்களின் எண்ணிக்கை 30 லட்சம் இருக்கும்.

இந்த நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் தனது பேஸ்புக்கில், முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த இடத்தில் அவருக்கு மரியாதை செலுத்தி மரம் நடவேண்டும் என விவேக் கூறியிருந்தார்.

ஆனால் அதனை நிறைவேற்றாமலேயே அவர் இறந்துவிட்டார்.

தற்போது அவர் கூறிய இடத்தில் மரக்கன்று நட்டு அவரது ஆசையை நிறைவேற்றிவிட்டேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பலரும் விவேக் இறந்தும் வாழ்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி என உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here