இறைச்சி, மீன், முட்டை விலைகள் சடுதியாக அதிகரிப்பு..!

0
164

சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

1000 முதல் 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 முதல் 1600 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சந்தையில் மீன் விலையும் அதிகரித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் கெலவல்ல 1900 ரூபாவிற்கும் பார 1700 ரூபாவிற்கும் தலபத் 2700 ரூபாவிற்கும் சாலயா 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், பொதுச் சந்தையில் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, முட்டைக்கான விலையை அரசாங்கம் நிர்ணயம் செய்த போதிலும், இன்னும் 53 ரூபா தொடக்கம் 55 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையிலேயே முட்டை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here