இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ஐடெக்) விழா

0
98

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அதேவேளையில் இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம் நிறுவப்பட்டு நூற்றாண்டையும் கொண்டாட உள்ளது.

அதே வேளையில் இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வந்து 200வது ஆண்டிலும் நாம் காலடி எடுத்து வைக்க உள்ளோம். எமது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தவும் கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார் திறன்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 1965ஆம் ஆண்டு உருவாக்க பட்ட இத்திட்டத்தின் மூலமாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துஉள்ளனர்.

அந்த வகையில் இத்திட்டத்தின் முன்னாள் மாணவனாகவும் டெல்லி பல்கலைக்கழகத்தின் புனித ஸ்டீபன் கல்லூரியின் ஃபெலோ ஆகவும் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகராலயத்திருக்கும் மற்றும் துணை உயரஸ்தானிகராலயத்திருக்கும் நன்றி கூறுவதில் பெருமை அடைகிறேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

கண்டியில் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ஐடெக்) விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான உதவி உயரஸ்தானிகர் அதிமேதகு வைத்தியர் ஆதிரா அவர்களும், கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை ராஜாங்க அமைச்சர் ரோகனா திசாநாயகே, பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் லமாவான்சே , கண்டி மாநகர முதல்வர் கேசர சேனாநாயக்க, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாண செயலாளர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அதிகாரிகள், என பலரும் கலந்து கொண்டார்கள்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here