இலங்கைக்கு எதிரான வெற்றி: இந்திய அணி சாதனை!

0
3
dailythanthi

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.இந்தியாவுக்கு இது 600-வது டெஸ்ட் போட்டியாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளது. இதே போல் தனது 300, 400, 500-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி கண்டிருக்கிறது. மொத்தத்தில் இந்தியா இதுவரை 187-ல் வெற்றியும், 188-ல் தோல்வியும் கண்டுள்ளது. 224 போட்டிகள் ‘டிரா’ ஆனது. மற்றொரு டெஸ்ட் சமனில் முடிந்தது.

இலங்கை மண்ணில் கடைசியாக 2015-ம் ஆண்டில் தோல்வி அடைந்த இந்தியா அதன் பிறகு தொடர்ச்சியாக 6 டெஸ்டுகளில் வெற்றிக்கனியை பறித்து இருக்கிறது. இதன் மூலம் இலங்கை மண்ணில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற வெளிநாட்டு அணியான இங்கிலாந்தின் சாதனையை (6 வெற்றி) சமன் செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here