தோட்ட தொழிலாளா்களுடைய அபிவிருத்திக்கு உரிய நிதிகள் சென்றடையவேண்டும் – ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பிராந்திய தலைவர் தெரிவிப்பு!!

0
116

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று 05.04.2018.திங்கள் கிழமை ஹட்டன் டைன் விருந்தகத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் ஆ ஜீவன். ராஜேந்திரன் தலைமையில் இடம் பெற்றது இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் தலைவர் உட்பட நோர்வூட், மஸ்கெலியா, அம்பகமுவ ஆகிய பிரதேச சபையின் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

ஈரோஸ் அமைப்பானது 1975ம் ஆண்டு ஆரம்பிக்கபட்டுள்ளதாகவும் 40வருடங்களாக அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் ஒரு காத்திரமான பங்களிப்பை செய்து வருவதாகவும் அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

1985  ஆம் ஆண்டு திம்பு    பேச்சிவார்த்தையின் போது மலையக மக்களின் பிரஜாஉரிமை மற்றும் பிரச்சனைகளையும் சா்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மலையக மக்களுக்கென தனியான மாகாணம் தேவை என்றும் 1987ம் ஆண்டு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

1988ம் ஆண்டு மேதின பிரகடனமாக மலையக மக்களின் இன செறிவிற்கேற்ப கிராமசேவகா் பிரிவு, பிரதேச்சபை பிரிவு, பிரதேச செயலகங்கள் பிரிவு, போன்றவற்றிற்கும் கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்

ஆனால் மாற்று கட்சி காராகள் கூறிவருகிறார்கள் நட்ச்சத்திர சின்னத்தில் போட்டியிடுகின்ற நாங்கள் துண்டு பிரசுரம் செய்துவருவதாக கூறி வருகிறார்கள் ஆனால் எதிர்வரும் காலங்களில் தோட்ட தொழிலாளா்களுடைய அபிவிருத்திக்கு 33ம் சரத்தின் படி உரிய நிதிகள் முறை சென்றடைய வேண்டுமெனவும் கேட்டு கொண்டார்.

பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here