உங்க தலை முடி வர வர ரொம்ப கொட்டுதா? அப்போ இந்த மசாலாப் பொருட்கள உணவுல அடிக்கடி சேர்த்துகோங்க!

0
68

பொதுவாக பெண்களுக்கு மழைக்காலங்களில் தலைமுடி அளவிற்கு அதிகமாக உதிர ஆரம்பிக்கும்.

இது ஈரப்பதம் மற்றும் காற்று அதிகமாக இருப்பதால் ஏற்படுகின்றது. அத்துடன் தலைமுடியை பருவ காலங்களில் மாற்றங்கள் ஏற்படும் போது கவனமாக கையாள வேண்டும்.

இது மட்டுமன்றி மன அழுத்தம், ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் ஹார்மோன் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தலைமுடி உதிர்வு இருக்கும்.தலைமுடி பிரச்சினையை கட்டுபடுத்த வேண்டும் என்றால் என்ன என்ன மசாலாப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

1. இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வதால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகின்றது. ஏனெனின் தலைமுடி வளர்ச்சிக்கு அதிகமான இரத்தயோட்ட அவசியம். இலவங்கப்பட்டை , முடியின் வேர்களைத் தூண்டவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவியாக இருக்கின்றது.

2. மஞ்சள்
பொதுவாக இந்தியர்களின் சமையலறையில் மஞ்சள் இல்லாமல் இருக்காது. இது சருமம் தொடக்கம் தலைமுடி வளர்ச்சி வரை அத்தணை விடயங்களிலும் தாக்கம் செலுத்துகின்றது. இதனால் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

3. இஞ்சி
இஞ்சி நமக்கு ஏற்படும் நோய்களை தடுப்பது மட்டுமன்றி தலைமுடி பிரச்சினைகளையும் சீர்படுத்துகின்றது. கூந்தலுக்கு தேவையான இரத்தயோட்டத்தை மேம்படுத்த உதவியாக இருக்கின்றது.

எனவே வறுவல், சூப்கள், தேநீர் அல்லது புத்துணர்ச்சியூட்டும் இஞ்சி கலந்த தண்ணீரை உணவில் சேர்த்து கொள்வதால் ஏகப்பட்ட பிரச்சினைகள் சரியாகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here