உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை இன்று விவாதத்திற்கு.

0
182

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள அவநம்பிக்கை பிரேரணை, இன்றைய தினம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இன்று(19) முற்பகல் 10 மணிமுதல் மாலை 5.30 வரை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், நாளைய தினமும் விவாதம் இடம்பெற்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த அவநம்பிக்கை பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 44 உறுப்பினர்கள் இந்த அவநம்பிக்கை பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here