உயிர்த்த ஞாயிறு வழக்கிலிருந்து ஜனாதிபதி ஓரங்கட்டப்பட்டார்

0
77

உயிர்த்த ஞாயிறு அன்று நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கை அவர் ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் கிடப்பில் போடுமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விசாரிக்க, நீதிபதி நுவன் தாரக ஹினடிகல தீர்மானித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறுதினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த தருணம் இலங்கையிலும் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடுவதற்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியில் ஆலயங்களில் திருப்பலியில் பங்கேற்றபோது இந்த பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here