உலகக் கோப்பை கால்பந்து – மெக்சிகோவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து!

0
3
dailythanthi

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை பேராடி வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து – மெக்சிகோ

23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. லீக் மற்றும் 2-வது சுற்று முடிவில் 16 அணிகள் 3-வது சுற்றை எட்டியுள்ளன. தற்போது 3-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட்) தொடங்கியுள்ளது.

இந்திய நேரப்படி இன்று காலை மெக்சிகோ சிட்டியில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மெக்சிகோ, இங்கிலாந்தை எதிர்கொண்டது.

முதல் பாதி

விறுவிறுப்பான இந்த மோதலில் வலுவான இரு அணிகள் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணிகளும் அடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கியன. அப்போது ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜுட் பெல்லிங்ஹாம் முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து 38-வது நிமிடத்தில் மீண்டும் ஜுட் பெல்லிங்ஹாம் கோல் அடித்து அசத்தினார்.

இதையடுத்து தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய மெக்சிகோ, இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. அப்போது ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ஜுலியன் கினோனெஸ் கோல் அடித்து முன்னிலையை குறைத்தார். இதனால் முதல் பாதி 2-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது.

2-ம் பாதி

இதையடுத்து துவங்கிய 2-வது பாதியில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தின. அப்போது ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை அற்புதமாக பயன்படுத்திய ஹாரி கேன் தனது முதல் கோலை பதிவு செய்தார். இதற்கு மெக்சிகோ அணி உடனடியாக பதிலடி கொடுத்தது.

ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் மெக்சிகோவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணியின் ரவுல் ஜிமெனெஸ் கோலாக மாற்றினார். இதன் மூலம் 1 கோல் மட்டுமே இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து இரு அணிகளும் மாறி மாறி கோல் முயற்சியில் ஈடுபட ஆட்டம் சூடு பிடித்தது.

இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும் அதை கோலாக மாற்றமுடிவவில்லை. 90 நிமிடங்கள் முடிவில் இங்கிலாந்து 3-2 என முனிலையில் இருந்தது. இதன் பின் கூடுதலாக 11 நிமிடங்கள் வழங்கப்பட்டன. சமனிலை கோலுக்காக மெக்சிகோவும் 4-வது கோலுக்காக இங்கிலாந்தும் கடுமையாக போராடின. இருப்பினும் எந்த கோலும் பதிவாகவில்லை.

இதனால் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவை வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here