உலகின் மிகப் பெரிய நீலமாணிக்க கல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

0
159

இரத்தினபுரியில் தோண்டியெடுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலமாணிக்கம் என அழைக்கப்பட்ட, மாணிக்கக்கல் முன்னர் கூறப்பட்டதைப் போன்று சந்தை மதிப்பை கொண்டதல்ல என்ற விடயம் தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்த மாணிக்கக்கல் 100 மில்லியன் டொலர்கள் பெறுமதியானது என்று கூறப்பட்டது. எனினும், அது 10,000 அமெரிக்க டொலர் மதிப்பை மாத்திரமே கொண்டது என்று நாடாளுமன்ற கோப் குழுவின் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

அத்துடன், இது பழங்கால மதிப்புடையது என்றும், வெட்டி மெருகூட்ட முடியாது என்பதால், அதனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்க மட்டுமே முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த மாணிக்கக்கல் தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் மக்களை தவறாக வழிநடத்தியுள்ளதாக கோப் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here