வீட்டில் இருந்த படியே உடல் எடையை குறைக்கும் நெல்லி – ஆரோக்கியமான பலன்கள்

0
86

நீங்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து உடல் எடைக் குறையும்.நெல்லியானது நம் உடலில் இருக்கும் பல விதமான நோய்களை தீர்க்கும் பல சக்திகளைக் கொண்டுள்ளது.

நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் இவை மருந்தாக நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயில் இருக்கும் சத்து உங்கள் கண்பார்வையை தெளிவாக்குகிறது. தலைமுடிகளுக்கு வளர்ச்சிக் கொடுக்கிறது.

நரைமுடி வருவதையும் தடுக்கிறது. மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது. உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி இளமையாக இருக்க உதவுகிறது.தேவையற்ற கொழுப்புக்களை விரட்டி மாரடைப்பு ஏற்படாமல் தவிர்க்கும். தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு நெல்லிக்கனியை சாப்பிடுவதால் இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.

நெல்லிக்கனியில் உள்ள விட்டமின் C யானது அதிக கொலஸ்ட்ராலை குறைக்கிறது மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்.நெல்லிக்காய் அனைத்து விதமாகவும் பயன்படுத்தலாம். இந்த நெல்லிக்காய்யை கொண்டு உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.

நெல்லிக்காய் சாறாகவும், தூளாகவும் பழமாகவும் உட்கொள்வதால் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதனால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு எடை இழக்கப்பட்டு உடல் எடையை குறைக்க போராடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here