உலகிலேயே விலை உயர்ந்த அன்னாசிப்பழம்!

0
83

ஒரு அன்னாசி பழத்தின் விலை 1,000 பவுண்டுகள் (இலங்கை மதிப்பில் 4 லட்ச ரூபா) என சர்வதேச ஊடகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

லண்டனில் கான்வால் தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஹெலிகான் அன்னாசி பழத்தின் வகைகளில் உலகின் மிக விலை உயர்ந்ததாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகான் அன்னாசி பழம் 1819ஆம் ஆண்டில்தான் முதல் முதலாக இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், தோட்டக்கலை வல்லுநர்கள் நாட்டின் தட்பவெப்பநிலை அன்னாசி பயிரிட ஏற்றபடி இல்லை என்பதை உணர்ந்திருந்தனர்.

இதனால், அவர்கள் அவற்றை பயிர் செய்வதற்கான பிரத்யேக வழிமுறைகளை உருவாக்கினர். அதற்கான செலவினம் அதிகம் என்பதால் ஒவ்வொரு அன்னாசி பழமும் 4 லட்சம் விலை (1,000 பவுண்டுகள்) பெறுகிறது.

மேலும், இவற்றை பொதுவில் ஏலம் விடும் பட்சத்தில் ஒவ்வொரு அன்னாசி பழமும் ரூ.10 லட்சம் வரை விலை போகும் என்று ஹெலிகன் தோட்டத்தின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

விக்டோரியன் கிரீன்ஹவுஸில் விளைவிக்கப்பட்ட இரண்டாவது அன்னாச்சி பழத்தை ராணி இரண்டாம் எலிசபெத் பரிசாகப் பெற்றதாக ஹெலிகன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், மாங்கனீஸ், பொட்டாஷியம் போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன. இது, உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த பழமாக திகழ்கிறது.குறிப்பாக, குளிர் காலத்தில் இதை உண்ணும்போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here