”என்ன தைரியம் இருந்தா அந்த பாட்டுக்கு ஆடுவ..?” – திருமணத்தன்றே விவாகரத்து!

ஈராக்கில் குறிப்பிட்ட பாடல் ஒன்றுக்காக மணமகள் டான்ஸ் ஆடியதற்காக மணமகன் விவாகரத்து செய்த சம்பவம் வைரலாகியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஒரு திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் ”மெசைதாரா” என்ற சிரிய பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடலின் வரிகள் திருமணம் ஆகும் மணப்பெண் மணமகனை கட்டுப்படுத்துவதாகவும், மணமகன் அவளுக்கு அடங்கி கிடப்பதாகவும் பொருள்படும்படி இருந்துள்ளது.

இந்த பாடலுக்கு மணப்பெண் நடனமாடியதால் மாப்பிள்ளை வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சினை பெரிதான நிலையில் திருமணம் செய்த அன்றே மணமகளை விவாகரத்து செய்வதாக மணமகன் அறிவித்துள்ளார். ஒரு பாடலால் திருமணத்தன்றே விவாகரத்தும் நடந்த சம்பவம் வைரலாகியுள்ளது.