கணவனின் சடலத்திற்கு உரிமைகோரும் நான்கு மனைவிகள்- குளியாப்பிட்டியில் சம்பவம்

0
26

குருநாகல் (Kurunegala) – குளியாப்பிட்டிய (Kuliyapitiya) மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை (20) இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை ஏற்றுக்கொள்வதற்கு நான்கு மனைவிகள் முன்வந்துள்ளதாக குளியாப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.பொலன்னறுவை உட்பட பல பிரதேசங்களில் வசிக்கும் பிரேமரத்ன அதிகாரி என்ற 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த நிலையில் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் 4 மனைவிகள் சடலத்திற்கு உரிமை கோரியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சைக்கிளில் பயணித்த இருவரும் குருநாகல் நோக்கிச் சென்ற காரை பின்தொடர்ந்து துரத்த முற்பட்ட போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அத்துடன் இந்த விபத்து பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதேவேளை விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here