கனடாவில் பிராம்டண் பாதுகாப்பு நிறுவனத்தின் விரிவாக்கம்: ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உதயம்!

0
3
citynews

கனடாவின் Brampton நகரை மையமாகக் கொண்டு இயங்கும் Roshel இராணுவ வாகன உற்பத்தி நிறுவனம், தனது உற்பத்தியை பெருமளவில் விரிவாக்கத் திட்டமிட்டு வருகிறது.

கனடிய ஆயுதப்படைகளுக்கு (Canadian Armed Forces) 1,600 முதல் 2,100 இலகுரக பயன்பாட்டு வாகனங்களை (LUVs) வழங்குவதற்கான சுமார் 6 பில்லியன் டொலர் மதிப்பிலான கூட்டாட்சி அரசின் பிரம்மாண்ட ஒப்பந்தத்தைப் பெற Roshel கடும் போட்டியில் உள்ளது.

இந்த ஒப்பந்தம் கிடைத்தால் ஆயிரக்கணக்கான கனடியர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Roman Shimonov தெரிவித்துள்ளார்.

இதற்காக, 2023 முதல் உற்பத்தியின்றி முடங்கியுள்ள Stellantis வாகன உற்பத்தி ஆலையின் இடத்தை Roshel பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

இதற்கு Brampton மேயர் Patrick Brown மற்றும் Unifor 1285 தொழிற்சங்கத் தலைவர் Vito Beato ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2026-க்குள் வாகன விநியோகத்தைத் தொடங்கத் தயாராக இருக்கும் ஒரே நிறுவனம் Roshel மட்டுமே எனக் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவு இன்னும் சில வாரங்களில் வெளிவரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here