கனடாவில் மதுபான வகைகளுக்கு புதிய விலை – ஏப்ரல் 01 முதல் புதிய நடைமுறை

0
137

கனடாவில் மதுபான வகைகளுக்கான வரி பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போதைய பொருளாதார பின்னணியில் இவ்வாறு மதுபான வகைகளுக்கான வரி அதிகரிப்பானது தங்களது தொழிற்துறைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என ரெஸ்டுரண்ட் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முடக்க நிலைகள், ஆளணி வளப்பற்றாக்குறை, விநியோகச் சங்கிலி பிரச்சினை, பொருட்களின் விலையேற்றம், பணவீக்கம் போன்ற காரணிகளினால் ரெஸ்டுரண்ட் தொழிற்துறை பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் அல்ஹகோல் வரி 6.3 வீதமாக உயர்த்தப்பட உள்ளது.

உற்பத்தியாளர்கள் மீதான வரி விதிப்பு இறுதியில் வாடிக்கையாளர்களின் கொள்வனவை மோசமாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.கடந்த நாற்பது ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வரி அளவு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here