கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் இலங்கை விஜயம்!

0
101

கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டையன், இன்று புதன்கிழமை (27) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இவர், நாளை (28), வெள்ளிக்கிழமை (29) ஆகிய இரு தினங்களும் இலங்கையில் தங்கியிருப்பார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 13 வருடங்களில், கனடா நாட்டிலிருந்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் முதலாவது வெளிவிவகார அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமையில் கனடாவில் அரசாங்கம் உருவாகி, ஓராண்டுக்குள் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர், நாளை வியாழக்கிழமை (28), இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்தவுள்ளதுடன், இது தொடர்புடைய ஊடகவியலாளர் மாநாடொன்றும் நடத்தப்படவுள்ளது.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை நாளை சந்திக்கவுள்ளார். அத்தோடு, தேசிய மொழிகள் சமத்துவ முன்னேற்ற திட்டம் குறித்தான கலந்துரையாடலுக்காக, தேசிய மொழிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனையும் அதே நாளில் சந்திக்கவுள்ளார்.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையன்று, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர், அங்கு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண அமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் சில சிவில் சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here