அமெரிக்காவின் மியாமி பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரு பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரு கர்ப்பிணிகள் ஈன்றெடுத்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை.கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில், குழந்தைகளின் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்துள்ளது. இருப்பினும், அந்த இரண்டு குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்று ஆய்வாளர்களும், மருத்துவர்களும் ஆய்வு செய்தனர்.
அப்போது தாயையும், சேயையும் இணைக்கும் தொப்புள் கொடி மூலம் தொற்று பரவியது தெரியவந்தது. உயிரிழந்த குழந்தையின் உடலை உடற்கூராய்வு செய்ததில், அதன் மூளையில் கொரோனா வைரஸின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.