குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவதில் சிக்கல்

0
79

குழந்தைகளுக்கான திரிபோஷா உற்பத்திக்காக கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படும் சோளத்தில் அஃப்லாடொக்சின் அளவு அதிகரிப்பதால் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் வைத்திய அதிகாரி அலுவலகங்களின் கோரிக்கைக்கு அமைவாக சிறுவர்களுக்கு திரிபோஷா விநியோகம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சோளத்தில் உள்ள அஃப்லாடொக்சின் அளவு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்நாட்டில் கிடைக்கும் மக்காச்சோளம் குழந்தைகள் திரிபோஷ தயாரிப்பதற்கு ஏற்ற தரத்தில் இல்லை என திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையால் குழந்தைகளுக்கு திரிபோஷா தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து எதிர்காலத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உலக உணவு ஸ்தாபனத்தின் ஊடாக திரிபோஷா மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here