கையில் குழந்தை – களத்தில் எதிராக கால்பந்து உலகின் சுவாரசியம்!

0
2
dailythanthi

2007-ஆம் ஆண்டு, பார்சிலோனா கால்பந்து கிளப்பும் யுனிசெஃப் (UNICEF) அமைப்பும் இணைந்து வெளியிட்ட நன்கொடை காலண்டருக்காக நடைபெற்ற புகைப்படப்பிடிப்பில், அப்போதைய 20 வயதான லியோனல் மெஸ்ஸி, 6 மாதக் குழந்தையான லமின் யமாலை குளிப்பாட்டும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்தக் குழந்தைதான் இன்று ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் லமின் யமால். புகைப்படக் கலைஞர் ஜோன் மான்போர்ட் எடுத்த அந்தப் புகைப்படம், 2024-ல் மீண்டும் வைரலானது.

2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. 2007-ஆம் ஆண்டு, உலக கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் கையில் குழந்தையாக இருந்த லமின் யமால், இன்று ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்து, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸிக்கு எதிராக களமிறங்க உள்ளார்.

ஒரு வைரல் புகைப்படத்தில் தொடங்கிய இந்த அபூர்வமான தொடர்பு, 19 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து வரலாற்றின் மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் சுவாரசியமான தருணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here