கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கை.

0
113

கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கை இனந்தெரியாத எவரும் நடமாடினால் சங்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் கோரிக்கை.

கொட்டகலை பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்று குற்றச்செயல்களை தடை செய்வதற்காக கொட்டகலை வர்த்தக சங்கம் விசேட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான விசேட பாதுகாப்பு கூட்டம் வர்த்தக சங்கத்தின் தலைவரும் மலையக மக்கள் முன்ணனியின் நிதிச்செலாளருமான புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் இன்று (14) திகதி கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் தேவஸ்த்தான மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்களும் ஆள் கடத்தல் காரர்களும் அதிகரி;த்துவருதாகவும் இது குறித்து முன்கூட்டியே எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக குறித்த கூட்டத்தில் மிகவும் விரிவாக கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்……..

கடந்த காலங்களில் கொட்டகலை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்தோடு பாடசாலை மாணவர்கள் கடத்தல் சம்பவங்கள் ஏனைய பிரதேசங்களில் பதிவாகி வருகின்றன. இவை அனைத்தையும் தடுக்கும் வகையில் கொட்டகலை வர்த்தகம் இந்த பாதுகாப்பு கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தது. இதில் திம்புல்ல பத்தனை பொலிஸ் நிலையத்தின் பிரதான பரிசோதகர். ஆனந்த ஸ்ரீ கிராம சேவகர் உள்ளிட்ட கொட்டகலை வர்த்தக சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் உட்பட வர்த்தகர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கொட்டகலை பிரதேசத்திற்கு இனந்தெரியாத எவரையாவுது கண்டால் அது தொடர்பாக கொட்டகலை வர்த்தக சங்கத்திற்கோ அல்லது பொலிஸாருக்கோ அறிவிக்குமாறும், பாடசாலை மாணவர்கள் வீடு செல்லும் போதும் அல்லது பாடசாலைகளுக்கு செல்லும் போது பஸ் |போக்குவரத்து வசதிகள் இன்றி நின்றால் அவர்களை உரிய இடங்களுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இதே திருமண நிகழ்வுகள் நடத்தும் போது அல்லது நிகழ்வுகள் முன்னெடுக்கும் போதும் உரிய இடத்தின் மற்றும் நபர்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும் மண்டப உரிமையாளர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நிகழ்வுகளில் ஏதாவது அசபாவிதங்கள் நடந்தால் அவர்களே அதற்று பொறுப்பு கூற வேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டன.

எனவே இது குறித்து பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் சந்தேகத்திடமான முறையில் எவரும் நடமாடினால் இது குறித்து உடன் அறியத்தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலுக்கு திம்புல்ல பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஆனந்த ஸ்ரீ கிராம சேவகர் முருகாநந்தன் உள்ளிட்ட வர்த்தக சங்கத்தின் செயலாளர் பொருளாளர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here