கொட்டாஞ்சேனையில் இரட்டைக் கொலை!

0
6
wheldonlaw

கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்லை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கூர்மையான ஆயுதத் தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை நகரில் நேற்று (14) இரவு இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து இரண்டு நபர்களால் குறித்த இளைஞர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில் 54 வயதுடைய நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பழைய பகை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here