சமைத்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் உடலுக்கு ஆபத்தா? உண்மை விளக்கம் ….

0
93

எமது பலரின் வீடுகளில் ஒரு சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் ஒரு தடவை மட்டுமல்லாது அது முடியும் வரை பயன்படுத்துவது நமது தாய்மாரின் வழக்கம். பல சிற்றுண்டிகள், மாமிசங்களை , மரக்கறிகள் போன்றவற்றினை பயன்படுத்திய பின்னர் எண்ணெயினை பயணப்படுத்துகின்றோம்.
அனால் மருத்துவ ரீதியாக சமையல் எண்ணெய்களை அதிகமாக சூடேற்றுவது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு விளைவிக்க கூடியதாக அமையும் மட்டுமல்லாது வெவேறு விளைவுகளை உண்டாக்கும் கூறுகளை உருவாக்கும் என கூறப்படுகின்றது..

அதாவது சமையல் எண்ணெயினை தொடர்ந்து சூடாக்கும் பொழுது அதில் Free Radicals என்ற மூலக்கூறு உருவாகும். அது எண்ணெயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை குறைத்துவிடுமாம். இதனால் தீய கொழுப்புகள் அந்த எண்ணெயில் சேர்ந்து கொண்டே இருக்கும் .

இதனால் பலவிதமான புற்று நோய்களும் உண்டாகலாம் என மருத்துவர்கள் தொடர்ந்தும் எச்சரித்து வருகின்றனர். இதற்கு பதிலாக நீங்கள் பயன்படுத்திய எண்ணெயினை ஆற வைத்து அதனை உணவில் உள்ள துகள் இல்லாதவாறு வடித்து உள்ளே காற்று போகாதவாறு ஒரு போத்தலில் ஊற்றி வைக்கவும்.

பல நாடுகளில் பயன்படுத்திய எண்ணெயினை மட்டும் பயன் படுத்தி பயோடீசல் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here