சர்ச்சையில் சிக்கிய விம்பிள்டன் சாம்பியன் – 4 ஆண்டுகள் தடை!

0
2
dailythanthi

டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனையும், 2023-ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்றவருமான செக்குடியரசு நாட்டைச் சேர்ந்த மார்கெட்டா வோன்ட்ரோசோவா, ஊக்கமருந்து பரிசோதனை விவகாரத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

போட்டிகள் இல்லாத சாதாரண காலத்தில், வீரர்-வீராங்கனைகளிடம் திடீர் ஊக்கமருந்து சோதனை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், வோன்ட்ரோசோவாவின் இல்லத்திற்கு ரத்தம் அல்லது சிறுநீர் மாதிரிகளை சேகரிக்க அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால், அவர்களிடம் தனது மாதிரிகளைக் கொடுக்க வோன்ட்ரோசோவா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் (ITF) நேர்மை கமிட்டி, அவர் மீது விதிமுறை மீறல் குற்றச்சாட்டைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறியது அல்லது சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், வோன்ட்ரோசோவாவுக்கு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாட 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது அவரது டென்னிஸ் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து வோன்ட்ரோசோவா அளித்துள்ள விளக்கத்தில், “பரிசோதனைக்கு வந்த அதிகாரி தன்னை முறையாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அவரது செயல்பாடுகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதோடு, பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்ததால் பதற்றத்தில் மாதிரியை வழங்கவில்லை. மற்றபடி பரிசோதனையைத் தவிர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here