சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு 46 வருடம் தேயிலை தொழிற்துறையில் கடமையாற்றிய நாகம்மாவிற்கு 104 வது பிறந்த தினம் 14.03.2018 கொண்டாடப்பட்டது.களனிவெலி கம்பனிக்குற்பட்ட டில்லரி தோட்டத்தை சேர்ந்த நாகம்மா 46 வருடங்களாக தொழிலாளியாக கடமையாற்றி பெருந்தோட்ட தேயிலை தொழிற்துறைக்கு பெரும் பங்காற்றியவராவர்.
மூன்று பிள்ளைகளின் தாயான நாகம்மாவிற்கு களனிவெலி கம்பனியினால் தொடர்ந்து ஐந்து வருடங்களாக பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
08.03.2018. அன்று 104 வது பிறந்த தினத்தையிட்டு முகாமையாளர் உட்பட அதிகாரிகளினால் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் .மு.இராமச்சந்திரன்