காசல்ரீ நீர் தேக்கத்தில் 1 லட்சம் கிராப் மீன் குஞ்சிகள் விடப்பட்டது!!

0
164

நன்நீர் மீன் வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்கும் வகையில் காசல்ரீ நீர்தேக்கத்தில் ஒரு லட்சம் கிராப் மீன் குச்சுகள் விடப்பட்டுள்ளது.காசல்ரீ நன் நீர் மீன் பிடி தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கினங்க நுவரெலியா நன்நீர் மீன் வளர்ப்பு திணைக்களத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது

காசல்ரீ நீர்தேக்கத்தில் பாதுகாப்பு கூடுகள் அமைத்து விடப்பட்ட மேற்படி மீன் குஞ்சுகள் ஒரு மாத கால வளர்ச்சியின் பின்னர் நீர் தேக்கத்தில் விடப்படுவதுடன் வருடத்தில் 20 மடங்கு இனபெருக்கத்தை கொண்டதாகவும் 6 மாத காலத்தில் 2 கிலோ கிராம் வரை வளர்ச்சியடையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

04 11

மேலும் 45 மீனவ குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தும் மீன் பிடி தொழிற்துறையை ஊக்குவிக்கும் வகையில் மேற்படி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here